காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு; இந்தியா அபாரம்… 22 தங்கப் பதக்கத்துடன் எத்தனையாவது இடம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
8 August 2022, 8:15 pm

உலக நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 22 பதக்கங்களை வென்றுள்ளனர்.

72 நாடுகள் பங்கேற்ற 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 28ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது.
போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்த தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது.

விளையாட்டு போட்டிகளின் இறுதி நாளான இன்று இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, பதக்கங்களுடனேயே இந்தத் தொடரை நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக இன்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அசத்தியது.

இறுதிநாளில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அசத்தியது. பி.வி. சிந்து மற்றும் இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

அதே போல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இறுதியாக நடைபெற்ற ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கடைசி பதக்கமாக இது அமைந்தது.

இறுதியாக இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 1991

    1

    0