விவகாரத்து சர்ச்சை.. சானியாவை ரொம்ப மிஸ் பண்றேன் : மனம் திறந்த ஷோய்ப் மாலிக்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 1:54 pm

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில், ஷோயப் மாலிக் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இதனால் சானியா மிர்சாவை விரைவில் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஷொயப் மாலிக் ஜியோ நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் மனம் விட்டு பேசிய அவர், அப்போது, எனக்கும் சானியா மிர்சாவுக்கும் இடையிலான உறவு குறித்து கடந்த சில மாதங்களாக வதந்தி பரவியது. அதில் உண்மையில்லை.

இந்த ரமலான் பெருநாளை சானியா மிர்சாவுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவருக்கு பணிகள் இருப்பதால் அவரால் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

காரணம் அவர் ஐபிஎல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருவதால் ரமலான் அன்று நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டிய நிலை. சானியாவை இப்போது நான் ரொம்ப மிஸ் பண்றேன், இப்போதைக்கு இதைமட்டும்தான் சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

விவாகரத்து சர்ச்சை எழுந்த நிலையில், சோயப் மாலிக் தற்போது விளக்கமளித்தாலும், அவர்களது உறவில் விரிசல் உள்ளதா இல்லையா என்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 424

    0

    0