ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் : பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார்.
தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வரும் 26 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. மேலும் இஷான் கிஷானுக்கு பதிலாக மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனிப்பட்ட காரணங்களால் டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை அடுத்து இஷான் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் ஜனவரி 3-ம் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார். அதே நேரத்தில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஜாம்பவான்களும் களமிறங்க உள்ளனர்.
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா மற்றும் கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.