சிஎஸ்கே அணிக்கு DRS முறை ரத்து.. சர்ச்சையான கான்வே அவுட் : தடுமாறிய சென்னை… மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது என்ன?!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 8:02 pm
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் கொண்டு போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது.
ஏற்கனவே சென்னை – மும்பை அணிகள் கடந்த மாதம் 21ஆம் தேதி மோதியது. அதில் சென்னை வெற்றி பெற்றது. இந்த நிலையைல் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆட்டம் துவங்கும் முன்பே மும்பை வான்கடே மைதானத்தில் பவர் கட்டானது.
மின்வெட்டு ஏற்பட்டதால் டிஆர்எஸ் முறை இல்லை என நடுவர்கள் அறிவித்திருந்தனர். இந்த சூழலில் துவக்க ஆட்டக்காரர்களாக கான்வே, மற்றும் கெய்க்வாட் களமிறங்கினர். முதல் பந்தை எதிர்கொண்ட கெய்க்வாட் சிங்கிள் அடித்தார். இதையடுத்து கான்வே பேட்டிங் பிடிக்க, பந்தை டேனியல் சாம்ஸ் வீச, எல்டபிள்யூ முறையில் கான்வே அவுட் ஆனார்.
ஆனால் டிஆர்எஸ் முறையில் அவுட் பார்க்க முடியாததால் வேறு வழியின்றி கான்வே வெளியேறினார். பின்னர் அடுத்து களமிறங்கிய மொயின் அலியும் அவுட் ஆனார்.
சில நிமடங்களில் கரண்ட் வந்தது. அப்போது டிஆர்எஸ் முறையில் பார்த்த போது கான்வேயின் அவுட், அவுட் இல்லை என தெரிந்தது. ஏற்கனவே சென்னை அணி லீக் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த முக்கியமான போட்டி மும்பை அணிக்கே சாதகமாக அமைந்துள்ளது.
0
0