நடப்பு ஐபிஎல்லில் முக்கிய வீரருக்கு கல்தா…? அணியில் இருந்து விடுவிக்க CSK நிர்வாகம் முடிவு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Author: Babu Lakshmanan14 November 2023, 8:01 pm
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, லீக் சுற்றோடு வெளியேறியது. இந்தத் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெற்று களம்கண்ட பென் ஸ்டோக்ஸ், எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை.
இந்த சூழலில், பென் ஸ்டோக்ஸை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அவர் அந்தத் தொடரில் விளையாடவில்லை. ஸ்டோக்ஸின் ஆட்டத்திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு அணி நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை அணியின் இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.