பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஜிதேஷ் கனவு வீண் : 17 ரன்களில் டெல்லி வெற்றி… புள்ளிப் பட்டியலில் பெங்களூரு அணிக்கு காத்திருந்த ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2022, 11:30 pm
ஐபிஎல் தொடரில் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – சர்பராஸ் கான் களமிறங்கினார்கள். இதில் வார்னர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுக்க, மிச்சேல் மார்ஷ் களமிறங்கினார்.
தொடக்கம் முதலே மார்ஷ் அதிரடியாக அடிவர, மத்தியில் சிறப்பாக ஆடிவந்த சர்பராஸ் கான் 32 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய லலித் யாதவ் 24 ரன்கள் எடுத்தும், பண்ட் 7 ரன்கள் அடித்தும், பவல் 2 ரன்கள் அடித்து வெளியேற, மத்தியில் சிறப்பாக ஆடிவந்த மிச்சேல் மார்ஷ் அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி.
ஆரம்பம் ஓரளவு இருந்தாலும், பேர்ஸ்டோ 28 ரன்னில் வெளியேற, தவான் 19 ரன்னில் அவுட் ஈனார். பின்னர் வந்த ராஜபக்சே, லிவ்விங்ஸ்டோன் சொற்ப ரன்னில் வெளியேற, மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.
ஜிதேஷ் ஷர்மா புதிய நம்பிக்கை கொடுத்து 44 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பஞ்சாப் தோல்வி உறுதியானது. 20 வது ஓவர் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பஞ்சாப் தோல்வியடைந்தது.
17 ரன்னில் வெற்றி பெற்ற டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. 4 வது இடத்தில் இருந்த பெங்களூரு அணிக்கு கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலையை கொடுத்துள்ளது டெல்லி.