ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி சாதனையை முறியடித்த தவான் : அட வேற லெவல் பா..!!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2023, 6:56 pm
இந்த ஆண்டிற்க்கான ஐபிஎல் தொடர் நேற்று குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி தற்பொழுது கோலாகலமாக நடந்து வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இன்று தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே உடனான பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 94 முறை 50 ரன் பார்ட்னர்ஷிப்களை அடித்து பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் சாதனையை பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் சமன் செய்தார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா 83 முறையும், டேவிட் வார்னர் 82 முறையும், ரோஹித் சர்மா 76 முறையும் 50 ரன் பார்ட்னர்ஷிப்களை அடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.