தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது? END CARD போட்டதா பிசிசிஐ தேர்வுக் குழு?!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 10:44 am

37 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக சாமீபகாலமாக ஒருநாள் அணியில் மட்டும் இடம் பிடித்து வந்தார். இந்தியாவில் அடுத்த ஆண்டு ஒருநாள் உலககோப்பை நடைபெற உள்ளதால் அந்த தொடரில் விளையாட தவான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.


கடந்த டி20 உலககோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை அடுத்து இந்திய அணியில் இளம் வீரர்களுக்கும், அதிரடி ஆட்டக்காரர்களுக்கும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

டி20 அணிக்கு பாண்ட்யாவை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்றும் குரல்கள் வந்தன. ஆனால் அது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அதன் ஒரு பகுதியாக தான் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் இடம் பிடிக்கவில்லை என தெரிகிறது.

இந்திய அணியில் தற்போது இஷன் கிஷன், சுப்மன் கில், ரோகித், ராகுல், கெய்க்வாட் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன், விராட் கோலி ஆகியோர் தேவைப்பட்டால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான ஷிகர் தவான் இந்திய அணிக்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,315 ரன்னும், 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதத்துடன் 6,793 ரன்னும், 68 டி20 போட்டிகளில் ஆடி 1,759 ரன்னும் எடுத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 604

    0

    0