மைதானத்தில் தோனி சொன்ன குட்நியூஸ்… மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு திரும்பிய ரசிகர்கள்..!!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 9:31 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிறகு தோனி சொன்ன தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தோனி மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போட்டிகளை மட்டுமல்லாமல் வெளி மைதானங்களில் நடந்த ஆட்டங்களில் கூட மஞ்சள் படையை காண முடிந்தது.

அந்த வகையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தனர். காரணம் என்னவென்றால், தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாக இருந்து விடுமோ..? என்ற அச்சத்தில் தான்.

இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத்தை கடைசி பந்தில் தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது. இதைத் தொடர்ந்து, தோனி ஓய்வு முடிவை அறிவித்து விடுவாரோ..? என்று அவரது பேச்சை ரசிகர்கள் எதிர்பார்த்து கேட்டனர்.

ஆனால், தோனி கூறியதாவது ;- மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது. இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது.

ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும். அது என்னுடைய உடலுக்கு எளிதானதாக இருக்காது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று. தற்போது நான் சென்னை மைதானத்தில் இருப்பதை போலவே உணர்கிறேன், எனக் கூறினார்.

இதன்மூலம், தோன அடுத்த சீசனிலும் விளையாட வாய்ப்பு இருப்பதால் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
  • Close menu