Breaking : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி… புதிய கேப்டன் யார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
24 March 2022, 3:50 pm

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு அணிகள் முக்கிய வீரர்களை எடுத்திருந்தாலும், சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேனான டூபிளசஸிஸை பெங்களூரூ அணி ஏலத்தில் எடுத்ததுதான் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

சென்னை அணி தன்னை தக்க வைத்துக் கொண்டாலும், பெரிய தொகை தனக்கு கொடுக்க வேண்டாம் என்று தோனி கேட்டுக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்த்திடாத போது, ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் தோனி. இதனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தோனி தொடருவாரா..? அல்லது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துவிடுவாரா என்று ரசிகர்கள் சீரற்ற மனநிலையில் இருந்தனர்.

Dhoni - Updatenews360

இப்படியிருக்கையில், தோனி இன்னும் இரு வருடங்களுக்கு சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறி அணியின் நிர்வாகம் ஆறுதல் அளித்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், சென்னை அணி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு பெரும் இடியை இறக்கியது போல் ஆயிற்று.

Michael Vaughan Feels Ravindra Jadeja Will Be A Great Player To Lead  Chennai Super Kings After MS Dhoni's Departure

அதேவேளையில், தோனிக்கு பதிலாக, ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதல் அளித்தாலும், தோனியின் கேப்டன்ஷிப்பிற்கு சென்னை அணியின் ரசிகர்கள் அடிமையாக இருப்பதே நிஜம். இதுபோன்ற ரசிகர்களால் இந்த அறிவிப்பை ஜீரணித்துக் கொள்ள முடியும் என்பது நிதர்சணமான உண்மை.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 1909

    0

    0