கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு.. சானியா மிர்சா எடுத்த திடீர் முடிவு : ரசிகர்கள் கவலை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 10:33 am

முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது.

மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார். மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார்.

முன்னதாக, சானியா 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.

முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார்.

சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டைய பட்டங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக புகழப்படுகிறார். அவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார்.

இதனிடையே சானியா மாலிக் ஜோடி தி மிர்சா மாலிக் ஷோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.”மியூசிக்கல் செலிபிரிட்டி டாக் ஷோவான இதில், நடிகர்கள் ஹுமாயூன் சயீத், ஃபஹத் முஸ்தபா, அட்னான் சித்திக் மற்றும் தொகுப்பாளர் வசீம் பதாமி ஆகியோர் சிறப்பு விழுந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்த டீசர் தற்போது வைரலாகி வரும் நிலையில், சானியாவின் இன்ஸ்டாகிராமில் இந்த டீசர் பகிரப்படவில்லை. இது குறித்து சானியாவின் ஃபாலோயர் ஒருவர், சானியாவின் பதிவு ஒன்றில், “சானியாவும் மாலிக்கும் விவாகரத்து செய்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், நிகழ்ச்சியின் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டதனால் தற்போது ஒன்றாக ஒன்றாக இருக்கிறார்கள், சானிய பல படங்களை வெளியிடுகிறார். ஆனால் மாலிக்குடன் ஒரு படம் கூட இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே பேட்டி ஒன்றில், சோயிப், விவாகரத்து இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார். விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு தானும் சானியாவும் பதில் அளிக்க மாட்டோம் என்றும், பத்திரிக்கையாளர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 440

    0

    0