இந்திய அணியில் அதிரடி மாற்றம்… கே.எல் ராகுல், விராட் கோலிக்கு செக் வைத்த கிரிக்கெட் வாரியம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 5:11 pm

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது.

அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது.

கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது. புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது.

புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும். இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர்.

முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார்.
இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!