சர்மாவுக்கு கர்மா… இந்திய அணியில் அதிரடி மாற்றம் : புதிய உற்சாகத்துடன் களமிறங்கும் இளம் வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 9:56 am

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி தொடரை வென்றது.

இதன் பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா , வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர் .

ரோகித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக இந்திய அணியில் நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுளள்ளனர் .மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியில், கேஎல் ராகுல் , சுப்மன் கில், புஜாரா , விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷாப் பண்ட் , கேஎஸ் பரத் , அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் உள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!