அறிமுக போட்டியில் சாதனை படைத்த தீப்… நங்கூரம் போல நின்று ரன்களை குவித்த ரூட்… முதல் நாளில் இங்கிலாந்து டாப்..!!
Author: Babu Lakshmanan23 February 2024, 5:10 pm
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் அறிமுக வீரராக களமிறங்கினார்.
போட்டி தொடங்கியதும் இந்திய அணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியது. குறிப்பாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப், டக்கெட் (11), போப் (0), க்ரவுலி (42) ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஆனால், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ரூட் சதம் விளாசினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன் எடுத்துள்ளது. ரூட் 106 ரன்னுடனும், ராபின்சன் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
,