ரோகித், கில் அபாரம்… இமாலய ஸ்கோரை நோக்கி இந்திய அணி ; குல்தீப் – பும்ரா போட்ட நங்கூரம்…!!

Author: Babu Lakshmanan
8 March 2024, 7:18 pm

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. அதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஷ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜெய்ஷ்வால் 57 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா (103), கில் (110) சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து வந்த படிக்கல் (65), சர்பிராஷ் கான் (56) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் (27), பும்ரா (19) நங்கீரம் போல நிலைத்து நின்று ஆடினர். இதனால், 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!