41 வயதில் புதிய மைல்கல்லை எட்டிய ஆண்டர்சன்…. சாதனை பட்டியலில் இணைந்த முதல் வேகப்பந்து வீச்சாளர்..!!!
Author: Babu Lakshmanan9 March 2024, 11:50 am
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு இங்கிலாந்து அணி அவுட்டானது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 477 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 259 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி 41 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், டெஸ்ட் கிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளை எடுத்து 2வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுக்களை கைப்பற்றி 3வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த அனில் கும்பிளே 619 விக்கெட்டுக்களும் உள்ளார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள பவுலர்களில் ஆண்டர்சன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர் ஆவார். வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்தவர்களின் பட்டியலில் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார்.