கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் இப்படியா..? அம்பத்தி ராயுடு வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் YSR காங்கிரஸ் கட்சியினர்..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 2:44 pm

கடந்த வாரம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தற்போது வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, ஐபிஎல போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரோடு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஆளும் ஒய்எஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது.

அதன்படியே, கடந்த வாரம், அதாவது டிசம்பர் 28ம் தேதி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், குண்டூர் அல்லது மசூலிப்பட்டினத்தில் அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்த ஒரு வாரத்திலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடைய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பத்தி ராயுடுவுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், வேறு கட்சிகளின் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 873

    0

    0