36 வயதில் பிரபல குத்துச்சண்டை வீரர் பிரே வியாட் திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 10:44 am

36 வயதில் பிரபல குத்துச்சண்டை வீரர் பிரே வியாட் திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

குத்துச் சண்டை எனப்படும் ரெஸ்ட்லிங் உலகில் பிரே வியாட் என்று அறியப்படுபவர். இவரது தனித்துவமான ஸ்டைல்களால் WWE -வில் மிகவும் பிரபலமானவர். 2009 ஆம் ஆண்டு குத்துச்சண்டை உலகில் தனது பயணத்தை தொடங்கிய இவர். கடந்த 14 ஆண்டுகளாக தனது தனித்துவமான சண்டை முறைகளால் குத்துச் சண்டை ரசிகர்களிடையே மிகப் பிரபலமானார்.

WWE தொலைக்காட்சியில் இவரது சண்டைக் காட்சிகள் பெரும் வரவேற்பை் பெற்றன. பல்வேறு காரணங்களுக்காக வியாட் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகள் பொட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் வெற்றிகரமான திருப்பத்துடன் வியாட் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பி அசத்தினார். தனது பயமுறுத்தும் மல்யுத்த முறைகளால் அடுத்த அண்டர்டேக்கராக பார்க்கப்பட்டவர் வியாட்.

இந்நிலையில் ப்ரே வியாட் உடல்நல குறைவால் இன்று அதிகாலை காலமானார். வியாட் உயிரிழந்ததாக WWE அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களும் மல்யுத்த வீரர்களும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரிபிள் எச்,  WWE குடும்ப உறுப்பினரான மல்யுத்த வீரர் பிரே வியாட் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Shivrajkumar Health Updateநடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
  • Views: - 774

    0

    0