உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. சுமார் ஒரு மாதமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது.
பந்துடன் கோல் ஏரியாவுக்குள் ஊடுருவிய அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவை பிரான்சின் டெம்பெலே கையால் இடித்து தள்ளியதால் அர்ஜென்டினாவுக்கு நடுவர் உடனடியாக பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பதற்றமின்றி லாவகமாக கோல் அடித்தார்.
36வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் மாக் அலிஸ்டர் தட்டிக்கொடுத்த பந்தை ஏஞ்சல் டி மரியா வலைக்குள் செலுத்தினார். கோல் அடித்த பூரிப்பில் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வலுவான முன்னிலையை தொட்டது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி முதல் பாதியில் ஒரு ஷாட் கூட அடிக்காதது இதுவே முதல் முறையாகும். ஆனாலும் நம்பிக்கையை இழக்காத பிரான்ஸ் வீரர்களுக்கு, 80 மற்றும் 81வது நிமிடங்களில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.
இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 108வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக இருக்கலாம் என்ற நினைப்பை மீண்டும் எம்பாப்பே தகர்த்தார். 118வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அர்ஜென்டினா வீரர் மோன்டியல் பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார்.
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் என்ற மகத்தான சாதனையையும் 23 வயதான எம்பாப்பே படைத்தார். கூடுதல் நேரத்தில் ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமன் ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. அர்ஜென்டினா 3வது முறையாக கோப்பையை வென்றதால் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.