பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியே எனது கடைசி ஆட்டம்… ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி ; சோகத்தில் முடியும் உலகக்கோப்பை தொடர்…!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 9:34 am

FIFA உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியே தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று அர்ஜென்டினா அணியிக் கேப்டன் மெஸ்ஸி அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடந்து வரும் 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதி ஆட்டம் நேற்று நள்ளிரவு அல்பேத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வெளியேற்றியது. இதன் மூலம் வரும் டிசம்பர் 18ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே மகுடத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

முன்னதாக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி, லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், FIFA உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியே தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று அர்ஜென்டினா அணியிக் கேப்டன் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- “இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை போட்டிக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளது. அதில் பங்குபெற்றாலும் சிறப்பாக விளையாடி அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்வேனா என்று தெரியாது. வரும் 18 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்,” எனக் கூறினார்.

  • தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!
  • Views: - 506

    0

    0