போராடிய மும்பை… வென்ற ஐதராபாத் : 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. புள்ளிப் பட்டியலில் ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 11:32 pm
தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – பிரியம் கார்க் களமிறங்கினார்கள். இதில் 9 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, பிரியம் கார்குடன் இணைந்து அதிரடியாக ஆடத்தொடங்கினார். இந்த கூட்டணியால் அணியின் ஸ்கொர் உயர, அதிரடியாக ஆடிவந்த பிரியம் கார்க், 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவருக்கு பின்னால் அதிரடியாக ஆடிவந்த ராகுல் திரிபாதி 71 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரான் சிறப்பாக ஆடி 32 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து ஐடென் மார்க்கம் 2 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்கள் அடித்து வெளியேறினார்கள். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி துவக்க வீரர்கள், ஐதராபாத் அணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். அபாரமாக விளையாடி ரோகித் ஷர்மா 48 ரன்னில் வெளியறே, மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் 43 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து சாம்ஸ் 15 ரன்னில் வெளியேற, திலக் வர்மாக 8 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் டிம் டேடிவிட் அதிரடி சரவெடி ரன்கள் அடித்தார். 18 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த சஞ்சய் யாதல் டக் அவுட் ஆக, கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.
0
0