சுழற்பந்து சூறாவளி ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 9:37 pm

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது. எங்களின் இந்த சிறந்த விளையாட்டையும், களத்திற்கு வெளியே நான் அறிந்த ஒரு நபரையும் கடந்து சென்றதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. ‘ என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான புராணக்கதை மற்றும் சாம்பியன் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். RIP ஷேன் வார்னே….இன்னும் நம்ப முடியவில்லை’ என பதிவிட்டுள்ளார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…