முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை.. மனைவி, குழந்தை கண்முன் அரங்கேறிய கொடூரம்..!

Author: Vignesh
17 July 2024, 5:45 pm

முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா அம்பலங்குடாவில் மர்மநபர்களால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது இலங்கை கிரிக்கெட் யூ-19 அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்த நிலையில், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார். தற்போது, 41 வயதாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார்.

அங்கு, தமது வீட்டு முன்பாக தனியாக தம்மிக்க நிரோஷன் நின்று கொண்டிருந்த போது மனைவி, குழந்தை கண்முன் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சம்பவ இடத்திலேயே தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சில நாட்களுக்கு முன்னர்தான் துபாயில் இருந்து நிரோஷன் இலங்கை திரும்பியதாகவும், முன்னதாக, துபாயில் ஏதேனும் சிக்கலில் சிக்கி இருந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!