ஐபிஎல் விளையாடறதுக்கு பதிலா வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க ரோகித் : சுனில் கவாஸ்கர் பாய்ச்சல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 11:49 am

நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இந்த முறையும் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டவர்கள் இந்த சீசனில் சுமாராகவே ஆடி வருகின்றனர்.

இதற்கிடையே விரைவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயிற்சி பெறாமல் ரோகித் சர்மா ஐபிஎல்லில் கவனம் செலுத்தி வருவது சிக்கலைம் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மா இப்போது ஓய்வு எடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டும். கடைசி சில ஐபிஎல் போட்டிகளை கூட அவர் விளையாடலாம். ஆனால் ஒரு சிறிய ஓய்வு அவருக்கு தேவை என்று தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி