சொந்த மண்ணில் மோசமான ஆட்டம்… 7 வீரர்கள் ஒற்றை இலக்கு… குஜராத் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்…!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 10:03 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குஜராத் அணியின் பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். தொட்டது எல்லாம் துலங்கும் என்பதை போல எந்தப் பந்தை வீசுனாலும் விக்கெட் மழையாகவே இருந்தது.

அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே, அதிகபட்சமாக 30 ரன்களை குவித்தார். போல்ட் 15 ரன்களும், ஜெய்வால் 14 ரன்களும், படிக்கல் 12 ரன்களும் குவித்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருண்டது.

குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுக்களும், நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, ஹர்திக் பாண்டியா, லிட்டில் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சஹா – கில் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இது 2வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முன்னதாக லக்னோ அணி ஆர்சிபிக்கு எதிரா 108 ரன்களை எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராக இருக்கும்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ