ரன் மழையை பொழிந்த குஜராத் அணி வீரர்கள்… அதிரடியில் கில், சாஹா : இமாலய இலக்கை நோக்கி லக்னோ..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 5:42 pm

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி குஜராத் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் கில் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாஹா 81 ரன்களுக்கு(10 போர்கள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்டிக் பாண்டியா, கில்லுடன் சேர்ந்து இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து விளையாடிய கில் தனது அரைசதம் கடந்தார். மறுபுறம் ஹர்டிக் பாண்டியா 25 ரன்களில் க்ருனாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கில் 94ரன்களும், மில்லர் 20 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!