‘என்னோட டீம் இப்படித்தான் இருக்கனும்’ ; ரோகித்தை விட வித்தியாசமாக யோசிக்கும் ஹர்திக் ; ரசிகர்கள் உற்சாகம்..!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 10:22 am

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி கடந்த 18ம் தொடங்கிய நிலையில், முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முந்தைய கேப்டன் ரோகித் ஷர்மாவை விட சற்று மாறுபட்டு யோசித்து, ஆடும் லெவனில் வீரர்களை களமிறக்கினார். அதாவது, மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று வேக பந்துவீச்சாளர்களை கொண்டு ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணியை எதிர்கொண்டார்.

india team - updatenews360

இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. குறிப்பாக, ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா 4 விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்த நிலையில், வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேசியதாவது :- அணியில் இருந்த அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினர். சூரியக்குமார் யாதவ் தன்னுடைய ஸ்பெஷல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் 170 அல்லது 175 ரன்கள் தான் அடித்திருப்போம். ஆனால் சூரிய குமாருடைய வித்தியாசமான ஆட்டத்தால் இலக்கு இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.

india team - updatenews360

பந்துவீச்சாளர்கள் இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். ஆடுகளம் ஈரமாக இருந்த நிலையிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கேப்டனாக அணியில் இன்னும் நிறைய பந்துவீச்சு தெரிந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த யுக்தி எப்போதும் பலன் தராது. இருப்பினும் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து வீச தெரிந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

india team - updatenews360

கடைசி ஆட்டத்தில் எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எனக்கு தெரியாது ஏனென்றால் ஒரு போட்டி தான் எஞ்சி இருக்கிறது .ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது எனது நிலைபாடு, எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 568

    4

    1