பெங்களூரு மருத்துவமனையில் ஹர்திக் பாண்டியா.. உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல் : களமிறங்கும் RR வீரர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 10:39 am

பெங்களூரு மருத்துவமனையில் ஹர்திக் பாண்டியா.. உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல் : களமிறங்கும் RR வீரர்!!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே பெறாத முதல் அணியாக இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

இதில் இந்திய அணி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மைதானத்தில் பந்தை துரத்தி செல்கையில் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். இதன் காரணமாக அந்த ஓவரில் விராட் கோலி பந்து வீசி நிறைவு செய்து இருந்தார்.

காயம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்த்திக் பாண்டியா நேரடியாக அரையிறுதி போட்டிக்கு உடல் தகுதி பெற்று இந்திய அணியில் இணைவார் என கூறப்பட்டது. இதற்காக ஒருநாள் பேட்டிங் பயிற்சியில் கலந்து கொண்டார்.

இருந்தும் அவர் இன்னும் சிகிச்சையில் தான் இருக்கிறார். இதனால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டதாகவும் தக்வல்கள் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 636

    0

    0