மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் அணியை இரண்டு ஆண்டுகளில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ரன்னர் பட்டம் வென்று கேப்டனாக செய்யப்பட்டு பாண்டியா வென்று கொடுத்திருந்த நிலையில், மீண்டும் மும்பைக்கு சென்றது விமர்சனத்துக்குள்ளானது.
ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம், ரோகித் ஷர்மாவுக்கு பதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் சரியான நபர் என நினைத்து மீண்டும் அவரை ட்ரேடிங் மூலம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இது ரோகித் ஷர்மாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருவதுடன், அந்த அணியின் ஜெர்சி மற்றும் தொப்பியை எரித்தும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், மும்பை அணியின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளப்பக்கங்களை அன் ஃபாலோ செய்தும் தங்களின் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கணுக்கால் காயம் காரணமாக அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ரோகித் ஷர்மா மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா விலகலை ரோகித் ஷர்மா ரசிகர்கள், கர்மா என விமர்சித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.