வெறித்தனமான ஆட்டம்… பெங்களூரூவை தனி ஆளாக நொறுக்கிய க்ளாசன் ; ஐதராபாத்துக்கு இவரு 2வது வீரர்…!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 9:36 pm

பெங்களூரூக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடந்து வரும் இன்றைய வாழ்வா..? சாவா..? போட்டியில் பெங்களூரூ – ஐதராபாத் அணியை எதிகொண்டு விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு மோசமான தொடக்கமே அமைந்தது. அபிஷேக் சர்மா (11), திரிபாதி (15) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், க்ளாசனுக்கு பக்க பலமாக விளையாடி கொடுத்தார். மறுமுனையில் க்ளாசன் அதிரடியாக விளையாடி, சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பந்துகளை பறக்கவிட்டார்.

இறுதியில் 49 பந்துகளில் சதமடித்த அவர் (104) ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதைத் தொடர்ந்து, ப்ரூக் (27 நாட் அவுட்) கைகொடுக்க ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது.

187 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்களூரூ அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி, டூபிளசிஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!