ஐதராபாத் டெஸ்ட் ; வலுவான நிலையில் இந்திய அணி… தத்தளிக்கும் இங்கிலாந்து…. ஜடேஜா, கேல் ராகுல் அபாரம்!!
Author: Babu Lakshmanan26 January 2024, 5:15 pm
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.
பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மளமளவென ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் (80), கேஎல் ராகுல் (86) ஆகியோர் சிறப்பாக ஆடினார். ஜடேஜா 81 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.