நம்பர் 1 பவுலர் இப்படி பண்ணலாமா..? மைதானத்தில் பும்ரா செய்த காரியம் ; ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஐசிசி..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 4:34 pm

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் முதல் இன்னிங்சில் எடுத்தன. பின்னர், 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, போப்பின் (196) சிறப்பான ஆட்டத்தால் 420 ரன்களை குவித்தது.

இதன்மூலம், 231 ரன்களை இலக்காக கொண்டு 4வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுக்கள் சரிந்தன. இதனால், 202 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மென் ஒல்லி போப் ரன் எடுக்க ஓடும் போது, மைதனாத்தில் அவருக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதனால், ஐசிசி விதியை மீறியதற்காக பும்ராவுக்குக்கு கரும்புள்ளியை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 978

    0

    0