5 பேரு Duck.. 3 பேரு ஒற்றை இலக்கு… இலங்கையை பந்தாடிய இந்தியா ; மாஸாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

Author: Babu Lakshmanan
2 November 2023, 9:15 pm

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி கில் (92), கோலி (88), ஸ்ரேயாஷ் ஐயர் (82) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதுஷங்கா 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து, விளையாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் ரஜிதா (14), தீக்ஷானா (12), மேத்யூஸ் (12) மட்டும் இரட்டை இலக்கு ரன்களை எட்டினர். 5 வீரர்கள் ரன் எதுவுமின்றியும், 3 வீரர்கள் ஒற்றை இலக்கிலும் பெவிலியன் திரும்பினர். ஷமி 5 விக்கெட்டுக்களும், சிராஜ் 3 விக்கெட்டுக்களும், பும்ரா, ஷமி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!