ஆக்ரோஷமான COMEBACK கொடுத்த ஜட்டு… சுழலில் சுருண்டு போன ஆஸ்திரேலியா : முதல் நாளில் மாஸ் காட்டிய இந்தியா!!

Author: Babu Lakshmanan
9 பிப்ரவரி 2023, 7:14 மணி
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான கவாஜா, வார்னர் வந்த வேகத்தில் நடையை கட்டினர். தொடர்ந்து வந்த லபுஷக்னே, ஸ்மித் ஓரளவுக்கு தாக்கு பிடித்து ரன்களை சேர்த்தனர். லபுஷக்னே 49 ரன்னிலும், ஸ்மித் 37 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து, ஆக்ரோஷமான பந்துவீச்சை இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தினர்.

இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்தன. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த ஜடேஜா 5 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தனது முதல் விக்கெட்டை அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் தனது 450வது விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல் நிதான தொடக்கத்தை கொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டம் நிறைவுபெற ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில், கேஎல் ராகுல் (20 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக அஸ்வின் களமிறங்கினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 77 ரன்கள் எடுத்துள்ளது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 440

    0

    0