ஸ்டோக்ஸ் – மெக்குலம் காம்போவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி… உண்மையாலுமே உள்ளூரில் இந்தியா கிங்கு தான்…!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 3:00 pm

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ராஞ்சியில் கடந்த 23ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் சேர்த்து. அறிமுக வீரர் ஜுரேல் 90 ரன்கள் குவித்தார்.

46 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்னுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கில் 52 ரன்னுடம், ஜுரேல் 39 ரன்னுடனும் கடைசி வரை ஆடடமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி. ஆட்டநாயகனாக இளம் வீரர் ஜுரேல் தேர்வு செய்யப்பட்டார்.

2013ம் ஆண்டுக்கு பிறகு 150 ரன்னுக்கும் அதிகமான இலக்கை இந்திய அணி அடைந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும், உள்ளூரில் 200 ரன்னுக்கும் குறைவான இலக்குகளைக் கொண்ட 33 போட்டிகளில் 30 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களை சமனையும் இந்திய அணி செய்துள்ளது.

அதேவேளையில், பயிற்சியாளர் மெக்குலம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தொடரை இழந்துள்ளது. குறிப்பாக, 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து இருப்பதும முதல்முறையாகும்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?