டாஸ் போட்ட பிறகு குழம்பிப் போன ரோகித் : சில வினாடிகள் நிகழ்ந்த சைலண்ட்ஸ் : ரவி சாஸ்திரி கொடுத்த ரியாக்ஷன்!!
Author: Babu Lakshmanan21 January 2023, 3:35 pm
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
முதலில் பேட் செய்து வரும் நியூசிலாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 56 ரன்னுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து அந்த அணி விளையாடி வருகிறது.
போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங்கா..? பேட்டிங்கா..? என்பதை தேர்வு செய்வதற்கு சில வினாடிகள் யோசித்து, பிறகு பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.