நாளை மறுதினம் ஆட்டம் ஆரம்பம்… முன்பே கோப்பையை தட்டி தூக்கிய வில்லியம்சன்… கலகலத்துப் போன பாண்டியா..!!
Author: Babu Lakshmanan16 நவம்பர் 2022, 5:40 மணி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. இந்த நிலையில், இந்தத் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாட உள்ளது.
இதற்காக, டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், ஒருநாள் தொடருக்கு தவான் தலைமையிலான அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 30 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் குறித்த இரு அணியின் கேப்டன்களின் போட்டோசூட் நடத்தப்பட்டது. இருவரும் கடற்கரையோரப் பகுதிகளில் பல்வேறு புகைப்படங்களை எடுத்தனர்.
அப்போது, டி20 தொடருக்கான கோப்பையை வைத்து போட்டோசூட் எடுக்கும் போது, காற்று பலமாக வீசியது. இதனால், கோப்பை வைக்கப்பட்டிருந்த மேசை காற்றில் சரிந்து விழுந்தது. இதனை பார்த்த ஹர்திக் பாண்டியா மேசையை தாங்கி பிடிக்க முயன்றார். அப்போது, சாதுர்யமாக யோசித்த வில்லியம்சன், மேசை மீது வைக்கப்பட்டிருந்த கோப்பையை அலேக்காக தூக்கினார்.
கோப்பையை தூக்கிய போது, ‘இது எனக்கு தான்’ என்பதைப் போல வில்லியம்சன் செய்த செயலால், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட அங்கிருந்தவர்களை கலகலக்கச் செய்தது.
1
1