இதெல்லாம் உணவா..? பயிற்சி முடித்து வந்த இந்திய வீரர்கள் உணவு சாப்பிட மறுப்பு.. ஐசிசியிடம் பிசிசிஐ பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 10:01 am

சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ பரபரப்பு புகார் அளித்துள்ளது.

8வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்து, சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதையடுத்து, தனது 2வது லீக் போட்டியில் சிட்னியில் நாளை நடக்கும் நெதர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று ஐசிசியிடம் பிசிசிஐ பரபரப்பு புகார் அளித்துள்ளது. அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளுக்கு ஐசிசி உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ