பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் அதிரடி காட்டிய இந்திய அணி : இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று முன்னிலை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 10:29 pm

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.

Image

சிறப்பாக விளையாடிய ரோஹித் 12-வது ஓவரில் லஹிரு குமாரிடம் போல்ட் ஆகி 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 111 ரன்கள் எடுத்தனர். பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.

Image

ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடியதால் சதம் விளாசுவர் என எதிர்பட்டப்பட்ட நிலையில் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.

Image

பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர் நிஷாங்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்குமார் வீசிய முதல் பந்தில் அவுட்டாக, அடுத்து வந்த மிஷாரா 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Image

அடுத்து வந்த அசலங்காவுடன் லியாங்கே ஜோடி சேர்ந்தனர். ஆனால் லியாங்கே 11 ரன்னில் வெங்கடேஷ் பந்தில் வெளியேற, சாண்டிமால் அசலங்காவுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தல் சாண்டி மாலும் ஜடேஜா சுழலில் சிக்க, அடுத்து வந்த சனாகாவும் பெவிலியன் திரும்பினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய அசலங்கா அரைசதம் அடித்து விளாசினார். அப்போது வெங்கடேஷ் ஐயர் பந்தில் கருணா ரத்னே பெவிலியன் திரும்ப, சமீரா அசலங்கா ஜோடி நிதானமாக ஆடியது. முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 2128

    0

    0