அவுட் கொடுத்த அம்பயர்.. கோபத்தில் ஸ்டம்பை நொறுக்கிய இந்திய கேப்டன்.. மைதானத்தில் என்னதான் ஆச்சு..?

Author: Babu Lakshmanan
22 July 2023, 9:59 pm

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளயாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார்..? என்று தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி இந்தியா 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், இரு அணிகளும் தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழந்த விதம் கடும் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. வங்கதேச அணியின் நகிதா அக்தர் வீசிய 33வது ஓவரின் 4வது பந்தில் நடுவரால் எல்பிடபிள்யூ என தீர்ப்பு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ஹர்மன்பிரீத் கவுர்.

அம்பையர் அவுட் கொடுத்த போது களத்திலேயே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து தனது ஆவேசத்தை வெளிக்காட்டினார். மேலும், அம்பயரை பார்த்து ஆவேசமாக பேசியபடி வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்ற போது, பந்து பேடில் பட்டதாகக் கருதி அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேடில் படுவதற்கு முன்பாக அவரது பேட்டில் பட்டது. இதற்கு தனது மட்டையை தூக்கி அம்பயரிடம் சைகையும் காட்டினார். ஆனாலும், நடுவர் அவுட் கொடுத்ததால் ஏமாற்றமடைந்த கவுர், அம்பையர் இடமும் ஆடுகளத்திலும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அதோடு, போட்டி முடிந்த பிறகு, தனக்கு இழைக்கப்பட்ட தவறான தீர்ப்பை வெளிப்படையாகவே விமர்சித்தார். இந்தப் போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதாகவும், மீண்டும் வங்களாதேசத்திற்கு விளையாட வரும் போது, இது போன்ற மோசமான அம்பயரிங் சவால்களையும் சந்திக்க தயாராகி வருவேன் என்றும் கூறியிருந்தார்.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 2741

    0

    0