மாஸ் காட்டும் ஸ்மித் கேப்டன்ஷி… லியனின் சுழலில் சிக்கிய இந்திய அணி… இந்தூரில் விழுந்த தர்மஅடி.. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!!
Author: Babu Lakshmanan2 March 2023, 6:03 pm
இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு வெறும் 76 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.
இந்தூரில் கடந்த 28ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 109 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா, 197 ரன்கள் குவித்தது.
3வது நாளில் 88 ரன்கள் பின்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களும், ஸ்ரேயாஷ் ஐயர் 26 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லியான் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்மூலம், இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, கம்மின்ஸின் ஆப்சென்டால் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இருக்கிறது.