நடிகையுடன் நெருக்கம்.. வெளியான ஆபாசமான போட்டோஸ் : மாலிக் – சானியா பிரிவுக்கு இதுதான் காரணமா?
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 5:59 pm
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இருபெரும் விளையாட்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது.
ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 124 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். நடப்பு டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கை எடுக்காதது கூட சர்ச்சையானது.
சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. 6 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர் சானியா மிர்சா. இந்திய விளையாட்டின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கை திருமணம் செய்தது பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.
ஷோயப் மாலிக் – சானியா மிர்சா ஜோடிக்கு இஷான் என்ற ஆண் குழந்தை உள்ளது. 2018ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா – ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது.
“உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.
சானியா மிர்சா – ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தானின் பிரபல மாடலும் நடிகையுமான ஆயிஷா ஓமருடன் கடந்த ஆண்டு நெருக்கமாக ஒரு ஃபோட்டோஷூட்டில் ஷோயப் மாலிக் கலந்துகொண்டார்.
அந்த ஃபோட்டோக்களில் ஷோயப் மாலிக்கும் ஆயிஷாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அந்த ஃபோட்டோஷூட்டுக்கு பின்னர் இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஃபோட்டோஷூட் குறித்து பாகிஸ்தான் ஊடகம் ஒருமுறை, இதை பார்த்துவிட்டு சானியா மிர்சா என்ன சொன்னார் என்று கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை ஆயிஷாவுடன் ஷோயப் மாலிக் நெருக்கம் காட்டுவதை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் ஷோயப் மாலிக்கை பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.