IPL 2024 : மும்பை அணியில் இருந்து விலக ரோகித் சர்மா முடிவு? ரசிகர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 1:57 pm

IPL 2024 : மும்பை அணியில் இருந்து விலக ரோகித் சர்மா முடிவு? ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஐபில் 2024 தொடர் தொடங்கியதுமே ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. முக்கிய காரணம் மும்பை அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது.

இதற்கு காரணம், டிரான்ஸ்பர் என்ற முறையில் குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி விலைக்கு வாங்கியது.

பின்னர் மும்பை அணியில் இணைந்த அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது அணி நிர்வாகம். ரோகித் ஷர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது சர்ச்சைக்குள்ளானது.

ஐபில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். யுவராஜ் உள்ளிட்ட் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் விமர்சனம் செய்தனர்.

பின்னர் ரோகித் ஷர்மாவும் இதை பொறுமையாக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். ஆனால் ஹர்திக் தலைமையிலான மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோற்றது.

குஜராத் அணியுடன் நடந்த முதல் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஐதராபாத் அணியுடன் விளையாடிய போது, மும்பை பந்துவீச்சாளர்களை ஐதராபாத் வீரர்கள் துவம்சம் செய்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே 277 என்ற அதிகபட்ச ரன்களை அந்த அணி எடுத்தது. அந்த போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

பின்னர் ராஜஸ்தான் அணியுடன் 3வது போட்டியில் களமிறஙங்கிய போது நிச்சயம் வெற்றிதான் என எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது மும்பை அணி தான் புள்ளிபட்டியலில் கடைசியில் உள்ளது.

இந்த நிலையில் மும்பை அணியில் 2 பிரிவுகள் உள்ளதாகவும், ரோகித்துக்கு ஆதரவாக ஒரு பிரிவும், ஹர்த்திக்குக்கு ஆதரவாக ஒரு பிரிவும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்குக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்ஷிப்பால் ரோகித் சர்மாக கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், மும்பை அணி நிர்வாகத்தின் மோசமான அ1குமுறை காரணமாக 2024 ஐபிஎல் தொடருக்கு பின் அணியில் இருந்து விலக ரோகித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் 3 போட்டிகளில் தோல்வி கண்ட ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் 2 போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வழங்கலாம். அதிலும் தோல்வியுற்றால் கேப்டன் பொறுப்பை மாற்றலாம் என முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1078

    1

    0