ஐபிஎல் தொடரில் வீரர்களை ஏலம் எடுப்பதில் புதிய விதி.. சிக்கலில் சஞ்சு சாம்சன்..!!

Author: Kumar
26 September 2024, 2:00 pm

ஐபிஎல் 2024 மெகா ஏலத்திற்கு முன், பிசிசிஐ அணிகளுக்கு 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.

2018 ஏலத்தில் 4 வீரர்களுடன் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை வழங்கிய பிசிசிஐ, இம்முறை 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதித்துள்ளது. இதனால், ஐபிஎல் அணிகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் அணியில் பல இந்திய இளம் வீரர்கள் இருப்பதால், 5 பேரை தேர்வு செய்வது சிக்கலாக இருக்கிறது.

 சிக்கலில் சஞ்சு சாம்சன்

மேலும் படிக்க: பெங்கரூளு பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த பட்லர் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை… இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் அணி !!

ராஜஸ்தானின் முக்கிய வீரர்கள், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாஹல் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம். இதனால் அஸ்வின், ஜுரெல் போன்ற வீரர்கள் மீதம் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர், ஹெட்மயர், போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் மீண்டும் ஏலத்தில் வாங்குவது கடினமாக இருக்கக்கூடும்.

இதனால் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இயக்குநர் சங்கக்காரா இணைந்து முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?