ரூ.20.50 கோடிக்கு ஏலம் போன கம்மின்ஸ்… தோனி சொன்னபடியே 2 முக்கிய வீரர்களை தூக்கிய சென்னை : ஐபிஎல் ஏலம் விபரம்..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 2:51 pm

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சென்னை, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, குஜராத், லக்னோ, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை எடுத்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ரோவ்மன் பவலை எடுக்க கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரோவ்மன் பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது. அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட தென்னாப்ரிக்க வீரர் ரூஸோவை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இங்கிலாந்து அதிரடி வீரர் ஹேரி ப்ரூக்கை எடுக்க டெல்லி – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். டிராவிஸ் ஹெட்டை எடுக்க சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடி சன் ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை தொகை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் மணீஷ் பாண்டேவை எடுக்க யாரும் முன் வரவில்லை. அதேபோல, அடிப்படை தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை

வனிந்து ஹசரங்காவை ரூ.1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கும், ஷர்துல் தாகூரை ரூ.4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஷாயை ரூ.50 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ். ஒமர்சாயை அடிப்படை விலைக்கே எடுத்தது குஜராத்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை எடுக்க சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே முதலில் போட்டி நிலவியது. பின்னர், கம்மின்ஸை சென்னையுடன் பெங்களூரூ அணி போட்டி போட்டது. தொடர்ந்து, ஐதராபாத் அணியும், பெங்களூரூ அணியும் ஆர்வம் காட்டின. இதனால், கம்மின்ஸின் விலை எகிறியது. இறுதியில், பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஏலத்தில் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ச ஏலத் தொகையாகும். முன்னதாக, சாம் கரண் ரூ.18.50 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்து வந்தது.

தொடர்ந்து, தென்னாப்ரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்ஷேவை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். இந்திய வீரர் ஹர்ஷல் படேலை எடுக்க பஞ்சாப் – குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அவரை ரூ.11.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது.

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை எடுக்க டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 11 கோடியை கடந்த நிலையில், போட்டியில் சென்னை அணியும் சேர்ந்தது. இறுதியில் ரூ.14 கோடிக்கு டேரில் மிட்சலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 942

    0

    0