ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலத்தில் முக்கிய வீரர்கள் அடிப்படை விலைக்கு மட்டுமே ஏலம் போனதும், பெரும்பாலான வீரர்களை எடுக்க எந்த அணியும் முன்வராமல் இருந்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளின் நிர்வாகங்களின் அணுகுமுறை சற்று மாறுபட்டதாகவே இருந்தது. சில அணிகள் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக தொகையை முதலீடு செய்து மலைக்க வைத்துள்ளன.
அந்த வகையில் சாம் கார்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் ரூ.16 கோடிக்கும் மேலாக ஏலம் போகினர். குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கரன் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
இவருக்கு அடுத்த படியாக கேமரூன் க்ரீன் 17.50 கோடி (மும்பை), பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி (சென்னை), நிகோலஸ் பூரன் 16 கோடி(லக்னோ), ஹாரி புரூக் 13.25 கோடி (ஹைதராபாத்), மயங்க் அகர்வால் 8.25 கோடி (ஹைதராபாத்), ஷிவம் மாவி 6 கோடி (குஜராத்) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
அதுமட்டுமில்லாமல், அதிக விலைக்கு போவார் என நினைத்திருந்த தமிழக வீரர் ஜெகதீசனை கொல்கத்தா அணி வெறும் 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்து ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் சிலர் அடிப்படை விலைக்கும், சிலர் ஏலம் போகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், அடில் ரசித், கை ஜாமிசன், ரஹானே, ஷகில் அல் ஹசன், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகாத மிக முக்கிய இந்திய வீரர்கள்:- வருண் ஆரோன், சந்தீப் ஷர்மா, சஞ்சய் யாதவ், பிரியங் பாஞ்சல், ஸ்ரேயஸ் கோபால், அபிமன்யு ஈஸ்வரன், தினேஷ் பானா, சவுரப் குமார், ஜெகதீசா சுதீப், பாபா இந்திரஜித், பிரியம் கார்க், திரிலோக் நாக்.
வெளிநாட்டு வீரர்கள்:- டாம் பாண்டென், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டிராவிஸ் ஹெட், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜிம்மி நீஷம், கிறிஸ் லின், டைமல் மில்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், நாதன் குல்டர் நைல், முஜீப் உர் ரஹ்மான், டேரில் மிட்செல், முகமது நபி, டாம் லதாம், மேட் ஹென்றி, இஷ் சோதி, டாம் கர்ரன், கார்லஸ் பிராத்வெய்ட், தசுன் ஷனகா, துஷ்மந்தா சமீரா, பாபியென் ஆலன், கீமோ பால், ஆகியோர் ஆவர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.