ஐபிஎல் ஃபைனலில் விளையாட தோனிக்கு தடையா..? வெளியான காரணம் ; அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan25 May 2023, 4:12 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. அதில், முதல் குவாலிபயர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த குஜராத் – சென்னை அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீசும் போது, பதனாரா பந்துவீச நடுவர்கள் அனுமதிக்கவில்லை.
காரணம், போட்டியின் நடுவே பந்து வீச்சாளர் பதிரனா மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறியிருந்தார். போட்டியின் விதியின்படி மைதானத்திலிருந்து போட்டியாளர் வெளியேறினால் 9 நிமிடங்களுக்கு பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படுவர். ஆனால் பதிரனா மீண்டும் மைதனாத்திற்கு திரும்பிய 4வது நிமிடத்தில் அணியின் சார்பில் பந்து வீச்சு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால்,இதற்கு நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே தோனி நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும், 5 நிமிடங்கள் இந்த வாக்குவாதத்திலேயே கழிந்து விட்டன. இதையடுத்து, தோனியின் திட்டப்படி, பதினாராவே அந்த ஓவரை வீசினார். இது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிசிசிஐயின் விதிப்படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வீரருக்கு அபராதமோ, அல்லது ஒரு போட்டியில் விளையாட தடையோ விதிக்கப்படலாம். எனவே, தோனிக்கு அடுத்த போட்டியில் விளையாட மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதேவேளையில், இது முதல்முறை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.