மழை வந்தாலும் பரவாயில்லை, மஹியை பார்க்க வேண்டும் : ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்க இரவில் இருந்து காத்திருக்கும் ரசிகர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2023, 8:45 am

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள சென்னை – மும்பை அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • audience cheering prabhu deva dance makes chiranjeevi angry பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?