ரஸல் போராட்டம் வீண்… மீண்டும் முதலிடத்தை பிடித்தது குஜராத் அணி… பட்டய கிளப்பும் பாண்டியா…!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 8:48 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா (67) அபாரமாக ஆடினார். சஹா (25), மில்லர் (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டழந்தனர். அந்த அணியின் ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரஸல் மட்டுமே வெற்றிக்காக போராடினார். அவர் 48 ரன்களில் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி குஜராத் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…