மொகாலியில் ரன் மழை பொழிந்த லக்னோ.. 10 ஆண்டுகளுக்கு பிறகு.. நூலிழையில் தவறிப்போன மெகா சாதனை…!!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 9:54 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி புதிய சாதனை படைத்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.

ஸ்டொயினிஸ் (72), மேயர்ஸ் (54), பூரண் (45), பதோனி (43) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம், ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக குவித்த 2வது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ அணி (257) அடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரூ அணி புனேவுக்கு எதிராக 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.

அதேபோல, ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகளை விளாசிய அணி என்ற சாதனையிலும் 2வது இடத்தை லக்னோ பெற்றுள்ளது. 27 4s, 14 சிக்சர்களுடன் மொத்தம் 41 பவுண்டரிகளை அந்த அணி அடித்துள்ளது. முதலிடத்தில் பெங்களூரூ அணி 21 4s, 21 சிக்ஸர்களுடன் மொத்தம் 42 பவுண்டரிகளை விளாசியுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 368

    0

    0